நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
இதுவரை காலமும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





