யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோரோனா பெருந்தொற்று நிலமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ்நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் படி, நிகழ்நிலையில் இன்றுயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இரண்டு அமர்வுகளாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. இதன் முதல் அமர்வு காலை 9 மணிக்கும் இரண்டாம் அமர்வு மதியம் 2 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் 1665 பட்டதாரி மாணவர்கள் தமது பட்டங்களை பெறவுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்
facebook – https://www.facebook.com/university.jaffna
youtube – https://www.youtube.com/channel/UCMNzGVtXq9_Y4oYOYEkd-7Q ஆகிய இணைப்புகளின் மூலம் பார்வையிடமுடியும்.
பட்டங்களை பெறவுள்ள மானவர்களுக்கு நேரலைக்கான இணைப்புக்கள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தரின் ஊடகப் பிரிவின் அறிவித்துள்ளது.
நாடு வழமைக்குத் திரும்பியதும் பிறிதொரு நாளில் மாணவர்களுக்கான சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்பட்டு மாணவர்களுக்கு பெற்றோர் முன்னிலையில் பதக்கங்கள் அணிவிக்கப்படும் என்றும் துணைவேந்தரால் முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





