ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 சதவீதம் வரை அதிகரிக்க இறக்குமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை நேற்றிரவு(07) முடிவு செய்தது. இந்த நிலையில் அதன் விலையை ஒரு கிலோ கிராமுக்கு 10 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதவேளை, கோதுமைமா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருள்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டது. புதிய விலைகள், இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





