கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதோர் வெளியேற்றப்படுவர் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றுவான் விஜயமுனி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காதோர் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படவார்கள்.
சுகாதார வழிகாட்டல் தொடர்பான நிபந்தனையின் அடிப்படையிலேயே புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி அளித்திருந்தது.
அதன்படி மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் மாத்திரமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் அனைவரும் சமூக இடைவெளியைப் பேணி முகக் கவசம் அணிவது கட்டாயமானது.
கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.





