மீண்டும் பயணத்தடையா? சுகாதார அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை!

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையானது எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் நேற்று(22) அறிவித்திருந்த நிலையில், பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து செயற்படுகிறார்களா என்பதை கண்காணிக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்க்கையில்,

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்குமானால் மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, மீண்டும் இவ்வாறானதொரு இக்கட்டான நிலைக்கு நாட்டை இழுத்துச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்படுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் அசேல குணவர்தன மேலும் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)