தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்திப்பு ஒன்று நிகழவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இதில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





