எதிர்வரும் டிசெம்பர் இறுதிக்குள் 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டை முழுமையாக திறக்க அரசு உத்தேசித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா தொற்றினால் நாட்டில் சுற்றுலா உள்ளிட்ட கைத்தொழில்கள் முற்றாக முடங்கியுள்ளதால் நாட்டின் வருமான மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





