வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும்,
இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் தாழமுக்கம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து ஈரப்பதன் மிகுந்த காற்றை தன்னுள் ஈர்ப்பதனால் இலங்கையின் பல பகுதிகளும் எதிர்வரும் 03.ஆம் திகதி வரை மழை தொடரும்.
அதே வேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது. கரையோரப் பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
மேலும் எதிர்வரும் 09ஆம் திகதி வங்காள விரிகுடா கடற்பகுதியில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






