நீதியமைச்சர் பதவியிலிருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவது தொடர்பான கடிதத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க நீதி அமைச்சர் அலி சப்ரி சென்றுள்ளதாகவும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
எனினும், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தாம் தீர்மானிக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





