தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தான் அக்கறையாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் இடம்பெற்ற தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவார்கள் என நினைப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.





