இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், யாழ்ப்பாணத் தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் 5.30 மணியளவில் கட்சி அலுவலக வளாகத்தில் வைத்து தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் சிவசேனை அமைப்பின் செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவரே தாக்கப்பட்டுள்ளார்.
“சிவசேனையில் உள்ள உனக்கு தமிழரசு கட்சியில் என்ன வேலை” நாங்கள் சொல்லும் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டுமெனக்கூறி என் கன்னத்தில் அடித்தார். நான் நிலத்தில் விழுந்துவிடடேன்.
கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். யாரும் எனக்கு உதவவில்லை. நான் எனது சகோதரனுக்கு தொலைபேசியில் அழைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் என தாக்கப்பட்ட ஜெயமரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும் (இங்கே Click செய்யவும்)





