இலங்கையின் முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் கேணல் அவிஹாய் சஃப்ரானி, இலங்கை பாதுகாப்பு அமைச்சின், பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இதன்போதே பாதுகாப்பு செயலாளர் குணரத்ன மற்றும் கேணல் சப்ரானி ஆகியோர், இலங்கை முப்படை வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ் இயக்கங்கள் ஆயுதப்போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இஸ்ரேல், இலங்கைக்கு முன்னிலை ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த நாடாக செயற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.





