மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர ஓவியருமான அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழக கலைப்பீடமாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஊடக கற்கைகள் பாடத்தினை சிறப்புக்கலையாக கற்கும் மாணவி ஒருவருக்கு கற்றல் ஊக்குவிப்புத்தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும் மறைந்த ஊடகயலாளர் அஸ்வினுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.






