முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி சடடத்தரணிகளால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
நீதித்துறை மீது கை வைக்காதே என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவான சட்டத்தரணிகள் இணைந்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.








