சீனாவிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று(14) சீனாவிற்கு பயணித்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் ஜனாதிபதி ரணில் பக்கத்து நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும் கடந்த வருடம் பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.