தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பெருநாள் என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

13ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.