இந்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தலின் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்திருந்த பிள்ளைகளின் பெற்றோரை விசாரணைக்காக இலங்கை பொலிஸார் புதன்கிழமை (29)அழைத்துள்ளனர்.
திங்கட்கிழமை, மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், இலங்கை இராணுவத்தின் 51வது படைப்பிரிவினரால் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு வெளியே தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சுடர் ஏற்றப்பட்டு, பாடல்கள் இசைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால், தமிழினத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்திலிருந்த பலர் மாவீரர்களின் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் உட்பட நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சில சிறுவர்கள் விடுதலைப் புலிகளின் சீருடை போன்ற ஆடையை அணிந்திருந்தனர் இதனை அடுத்து அவர்களின் பெற்றோர்கள் விசாரணைக்காக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.






