முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் கரு ஜயசூரிய ஆரம்பிக்கவுள்ள கட்சியில் இணையவுள்ளனர்.
ஐ.தே.கவின் தலைமைப் பதவியை கரு ஜயசூரிய கோரியிருந்த போதும் ரணில் விக்கிரமசிங்கே கோரியிருந்தார். எனினும் ரணில் விக்கிரமசிங்கே அதனை மறுத்துவிட்டார்.
இந்நிலையிலேயே முக்கிய அரசியல் பிரமுகர்கள், நிபுணர்களை இணைத்து தமது புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





