தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி தாயகப் பகுதிகளில் நேற்றைய தினம் ஹர்த்தால் இடம்பெற்றது. இதன் போது பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களின் விபரங்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளொடு பொலிஸார் தொடர்பு கொண்டு நேற்றய தினம் பாடசாலுக்கு சமூகமளித்த மற்றும் சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை அதிபர்களிடம் கோரியுள்ளனர்.
மேலும் பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கையையும் பொலிஸார் கேட்டறிந்து கொண்டார்.





