பொதுச்சபை ஒன்றும் தேநீர் கடையல்ல – சுகாஷ் சீற்றம்தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்சபை ஒன்றும் தேநீர் கடையல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
இன்றைய தினம் சட்டத்தரனி மணிவண்ணன் நடாத்திய ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்சபையை கூட்டவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாஷ் தனது முகநூல் பக்கத்தில் “பொதுச்சபை ஒன்றும் தேநீர் கடையல்ல, நினைத்த மாதிரிக் கூட்டுவதற்கு…தலைவரின் ஆலோசனையின் பிரகாரம் செயலாளராலேயே கூட்டப்பட முடியும். பகிடிக்கும் அளவிருக்கு” என பதிவிட்டிருந்தார்.





