யாழில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் யாழில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது என மக்கள் வீனாக அச்சமடையத் தேவையில்லை.
எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.





