‘அனைவருக்கும் வீடு’ எனும் செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு 113 குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.






