நிலவில் சூரிய ஒளி படும் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதனை அமெரிக்காவின் தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையமான நாசா உறுதி செய்துள்ளது.
நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மேற்கொண்ட ஆய்வின் போதே நிலவின் மேற்பரப்பினுள் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து தெரியும் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா விண்கலம் கண்டறிந்தாக நாசா தெரிவித்துள்ளது.





