இலங்கையில் இருந்து புறப்பட்டார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இலங்கைக்கு இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவிற்கான தனது விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் பிராத்தனை மேற்கொண்டு தனது விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவிற்கு புறப்பட்டார்.