இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. மகரவில் வசிக்கும் 40 வயதுடைய ஆணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி உயர் குருதி அமுக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
குறித்த சடலத்தின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போதே குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.






