வீட்டிலேயே மரணமடைந்த 23ஆவது கொரோனா தொற்றாளர்

நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவுவாகியுள்ளது. கொழும்பு – 15 ஐ ​சேர்ந்த 61 வயது பெண் வீட்டில் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டைவலியோடு வீட்டிலீயே இருந்துள்ளார். இந் நிலையில் நேற்று(2) இரவு வீட்டிலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சடலத்தின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த பெண் கொரோனாவால் மரணமடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இம் மரணம் இலங்கையில் கொரோனாவால் பதிவாகிய 23 ஆவது மரணமாக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.