யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் படகொன்றின் மூலம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் உள்ள சவுக்கு காட்டில் வந்து இறங்கிய நிலையில், இந்திய கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணைகளின்படி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





