கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கிளிநொச்சி – ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்றய தினம் 337 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று செய்யப்பட்டது. இதன் போது பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கடந்த மாதம் 25ம் திகதியன்று ஜெயபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந் நிலையில் வீடு திரும்பிய நாளில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.