தனியார் வகுப்புகளுக்கு செல்லாத காதல் ஜோடிகள் கைது

முறைகேடான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், 100 இள வயது ஜோடிகளை பொலிஸார் நேற்று (06) காலை கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் புனித பூமியில், பெரும்பாலான இள வயதுடைய ஜோடிகள் முறைகேடான முறையில் நடந்து கொள்வதாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய புனிதபூமி பகுதிக்கு திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைவாக இள வயதுடைய 100 ஜோடிகளை கைது செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், கல்வி நிலையங்களுக்கு செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து, இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பொது இடங்களில் முறைகேடாக நடந்து கொள்வதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.