முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட தற்போதய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்திறன் அற்ற தலைவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலம் பூர்த்தியாகும் நிலையில், அதிகளவிலான வர்த்தமானி அறிவித்தல்களை மாத்திரமே அவர் வெளியிட்டுள்ளாரே தவிர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் உட்பட ஆளும் தரப்பை சேர்ந்தோர் ஒவ்வொரு நாளும் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக வெறுமனே ஊடக சந்திப்புக்களை மாத்திரமே நடத்தி வருகின்றனர். மாறாக மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை, என்றார்.





