நாமல் புழங்கிய இடங்கள் தொற்று நீக்கப்பட்டன

வவுனியாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வந்து சென்ற இடங்களை தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வன்னியில் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்´ தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (09) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது வெளி மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் கலந்து கொண்டிருந்திருந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக கலந்துரையாடல் இடம்பெற்ற கேட்போர் கூடம் , விருந்தினர் மண்டபம் என்பன மாவட்ட செயலகத்தின் கோரிக்கைக்கமைவாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று(10) முன்னெடுக்கப்பட்டிருந்தது.