பழைய போகம்பரை சிறைச்சாலையில் 50ற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலைக் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைகளில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து போகாம்பரா சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகள் மீதும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் பல சிறைகளில் இருந்து மொத்தமாக 153 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.





