இளையவர்களை சரியாக வழிநடத்துவதன் மூலம் தான் தமிழர்களின் ஐனநாயக அரசியலை, அபிலாசைகளை சுதந்திர தாகத்தின் நெருப்பை அணைய விடாது பாதுகாத்து அதனை வென்றெடுக்க வழிகாட்டலாம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணி தலைவருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்தின் அடக்கு முறைகளையும் இலங்கைத் தீவில் மையங் கொண்டுள்ள பூகோள பிராந்திய அரசியல் சதுரங்கத்தை கையாள்வதற்கு வெறுமனே ஊடக அறிக்கைகள் விடுவதற்கு முன்னர் தமிழ்த் தலைமைகள் களத்தில் இறங்கி செயல் நடவடிக்கைளில் ஈடுபட வேண்டும்.
தமிழ் தலைமைகள் நீ,நான் என முந்திக்கொண்டு அறிக்கை விடுவது மீதமுள்ள தமிழ் மக்களை நட்டாற்றில் விடுவதாக அமைந்துவிடும் தமிழ் அரசியலை முன்னகர்த்தக் கூடிய ஆளுமை கொண்ட தேசப் பற்றுள்ள இளைய தலைவர்களை உருவாக்க வேண்டும்.
இளையவர்களை சரியாக வழிநடத்துவதன் மூலம் தான் தமிழர்களின் ஐனநாயக அரசியலை, அபிலாசைகளை சுதந்திர தாகத்தின் நெருப்பை அணைய விடாது பாதுகாத்து அதனை வென்றெடுக்க வழிகாட்டலாம். ஆகவே தமிழ்த் தலைவர்கள் கட்சி அரசியலை தாண்டி கூட்டாக ஒன்றிணைந்து செயல் நடவடிக்கையில் விரைவாக இறங்க வேண்டும், என்றார்





