வடமராட்சி – அல்வாய் பகுதியில் நேற்றிரவு(14) இரண்டு விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு விளையாட்டு கழகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலில் முடிவடைந்துள்ளது. மோதலின் போது காயமடைந்த 10 பேரும் நேற்றிரவு 10 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





