அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் அமெரிக்க டொலரில் டயர் ஆலை, சீனா முதலீடு

அம்பாந்தோட்டை துறைமுக தொழில்துறை மண்டலத்தில் இருந்து முதல் வெளிநாட்டு நேரடி முதலீடு நேற்று(19) பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் வீடியோ காணொளி மூலம் கையெழுத்திடப்பட்டது.

300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்ப முதலீடு சீனாவிற்கு ரேடியல் கார் மற்றும் டிரக் / பஸ் என்பவற்றின் டயர்களை ஏற்றுமதி செய்யும் முகமாக தயாரிக்கப்படவுள்ளது.

இந்த முதலீட்டை சீன நிறுவனமான சாண்டோங் ஹாஹுவா டயர் லிமிடெட் வழங்கியுள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய தனியார் டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.