கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு(19) தப்பி சென்றதாகவும், அதன் பின்னரான தேடுதலின் போது மகன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிய பெண்ணைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர்.





