23ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் உரும்பிராயில்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் “23ஆவது உலக மீனவர் தின” நிகழ்வு உரும்பிராயில் இன்று(21) இடம்பெற்றது.

“நிலப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பலமான சமூக இயக்கத்தை கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளில் உலக மீனவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.