அலரி மாளிகை தனிமைப்படுத்தல், பணியாளர்களும் உள்நுழைய தடை

கொரோனா அச்சம் காரணமாக பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சன்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,

அலரி மாளிகை இந்த வாரத்தில் முடக்கப்பட்டிருக்கும் எனவும், மறு அறிவித்தல் வரை பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகை முடக்கப்பட்டிருப்பது குறித்து இதுவரையில் எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.

அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையினர் பலருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அலரிமாளிகையைத் தனிமைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.