திருகோணமலை வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரை நேற்று(07) மாலையோடு நிறைவடைந்தது.
கடந்த 1ம் திகதி ஆரம்பமான யாத்திரை ஏழு நாட்கள் இடம்பெற்ற நிலையில் பாதயாத்திரை இடம்பெறும் பிரதான வீதியின் இருமரங்கிலும் உள்ள இந்து ஆலயங்களை தரிசனம் செய்து இறுதி நாள் பாதையாத்திரை வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தினை நிறைவடைந்தது.இதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்





