கொரோனவால் உயிரிழந்தவர்களின் தகனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் – சுகாதார அமைச்சர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று(25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்த செலவில் சவப்பெட்டிகளை வாங்க முடியும் அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என்பதும் சாதாரண நடைமுறை என அவர் கூறினார்.

ஆயினும், ஒரு குடும்பம் சவப்பெட்டிகளை வாங்க அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், அரசாங்கம் அதனை பொறுப்பெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐடிஹெச் மருத்துவமனையில் நேற்று இறந்த நபரை தகனம் செய்ய ஒரு குடும்பத்தில் இருந்து ரூ .58,000 வசூலிக்கப்பட்டதாக எம்.பி. ரஹ்மான் கூறினார்.