திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மூதாட்டியிடம் பொலிஸ் இராணுவம் விசாரணை

தியாகி திலீபன் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிக்க முயன்ற மூதாட்டியொருவரை பொலிஸாரும், இராணுவத்தினரும் துருவிதுருவி விசாரணை செய்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

கொக்குவிலைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிப்பதற்காக இன்று மதியம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார்.

அவர் அஞ்சலிக்க முயன்றபோது அங்கு நின்ற இராணுவம், பொலிஸார் சூழ்ந்து நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் விடுவித்துள்ளனர்.