யாழில் மூடப்பட்ட இரு தனியார் வைத்தியசாலைகள் உட்பட, 10 நிறுவனங்களை மீள திறக்க அனுமதி

யாழ்ப்பாணத்தில், காரைநகர் கொரோனா தொற்றாளி வந்து சென்ற என மூடப்பட்ட இடங்களை மீளத்திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் சுகாதார கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது .

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடைய நபர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில் காரைநகர் வாசி சென்ற போது கடமையிலிருந்த 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தவிர்த்து ஏனையவர்களை கடமைக்கு அமர்த்தி மூடப்பட்ட நிறுவனங்களை இன்று தொடக்கம் திறக்க அனுமதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.

இதேவேளை இன்று யாழ்ப்பாணம் மாநகரத்தில் 33 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழில் கொரோனா அச்சத்தால் தனியார் வைத்தியசாலை, 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது