பொன்னாலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை

பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சுழிபுரம் பெரியபுலோப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்கள்.