கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் உள்ளவர்களை அவதானமாக இருக்க வலியுறுத்தல்

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் வசிப்பவர்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இன்றிரவு 8.30 மணிவரையான பதிவின்படி கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் 6 அடியை அண்மித்துள்ள நிலையில் ஆதன் கொள்ளளவு 10அடி 6 அங்குலம் என கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், சி.கோகுலராஜா அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வியாழக்கிழமை அதிகாலை வான் பாய்வதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆகவே குளத்தின் அருகாமையில் இருப்பவர்கள், நீரோட்டத்திற்கு அருகில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.