க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மார்ச் மாதம் நடாத்த திட்டம் – கல்வி அமைச்சு

க.பொ.த சாதாரண நிலை தேர்வுகள் மார்ச் 2021 இல் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று(03) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

மார்ச் மாதத்தில் பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. பரிட்சைகள் மார்ச் மாதத்தில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டால், க.பொ.த. சாதாரண தர பரிட்சைகளின் முடிவுகளை மூன்று மாதங்களுக்குள் வெளியிட முடியும் என தெரிவித்தார்.

ஜூலை முதல் க.பொ.த. உயர்தர வகுப்புக் கற்கைகளை மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இது பரிசீலிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2021 இல் பரீட்சைகளை நடத்துவதற்கு 09 நாட்கள் பொருத்தமான கால அவகாசம் குறித்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் கல்வி அமைச்சு கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.