நாட்டில் வேலைவாய்ப்புக்கள் இல்லாத இளைஞர் – யுவதிகள் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிகையில்
கடந்த அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்கத் தவறிவிட்டது. தற்போது அது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்று வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 20 வீதமாகும். இதற்கு தற்காலிக அரசியல் நியமனங்கள்மூலம் தீர்வுகாண முடியாது.
எனவே நீண்டகால தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும். அதில் சர்வதேச நிறுவனங்களை அனுமதித்தாலும்கூட தேசிய ரீதியிலான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதனையே தற்போய அரசாங்கம் இன்று முன்னெடுத்து வருகின்றது. தற்போது வெளிநாட்டு முதலீடுகள் வருகின்றன.
அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. இவற்றை பயண்படுத்தி சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.





