நாளை முதல் ஒவ்வொரு வழித்தடங்களிலும் இரு பேருந்துகள் சேவையில் ஈடுபடும்

நாளை தொடக்கம் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக பாடசாலை நேரங்கள் மற்றும் அலுவலக நேரங்களின் போது இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளை இருக்கையின் அளவுகளுக்கு மாத்திரம் ஏற்றிச் செல்வதற்கு கடந்த தினம் பேருந்து பயணக் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சில பேருந்துகள் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

அவ்வாறு செயற்படுகின்ற பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.