முல்லைத்தீவில் நேற்றும் கனமழை, மக்கள் பாதிப்பு

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 700க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றும்(06) பல பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பனிக்கன்குளம் திருமுறிகண்டி இந்துபுரம் பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது.

இதனால் மாங்குளம் துணுக்காய் வீதியில் ஒரு பகுதியல் உள்ள வீடுகளும் பனிக்கன்குளம் கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் மிகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் சென்று வீடுகளில் தஙக முடியாத நிலையில் இருந்த சுமார் பத்து குடும்பங்கள் வரையில் இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.