வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பொலிஸ் பொலிஸார் வருகை

வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிறோசை கைது செய்வதற்கு சற்றுமுன் பொலிஸ் பிரதேச சபையின் வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகின்றது.

பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் தலைமையிலானவர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அண்மையில் அகற்றியிருந்தார்.

இது தொடர்பில் அவரிடம் இரு தடவைகள் பொலிஸார் வாக்குமூலம் பெற்ற நிலையில் சற்றுமுன் தவிசாளர் நிறோசை கைது செய்வதற்கு சற்றுமுன் பொலிஸ் பிரதேச சபையின் வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகின்றது.

தவிசாளர் இன்னமும் அலுவலகத்திற்கு வருகைதரவில்லை என அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.