மன்னாரில் ஒருவருக்கு கொரோனா

மன்னார் முசலி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பு சிலாபம் பகுதியில் இருந்து முசலி சவேரியார் புரத்திற்கு மீன்பிடிப்பதற்கு வருகைதந்த ஆறு பேரில் 3 வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மீதமுள்ள மூவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந் நிலையில் குறித்த நபருடன் தொடர்பில் உள்ள இருவரும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டனர்.